சுடச்சுட

  

  வேலூர் மாநகரில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையால் ஆபிசர்ஸ் லைனில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  திங்கள்கிழமை மாலை வேலூர், காட்பாடி பகுதியில் சுமார் 30 நிமிடம் மழை பெய்தது.

  இதில் வேலூர் ஆபிசர்ஸ் லைனில் தாழ்வான பகுதிகளான மீன் மார்க்கெட், தெற்கு காவல் நிலையம், வெங்கடேஸ்வரா பள்ளி சிக்னல் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வேலூர் மக்கான் பகுதியில் இருந்து வெங்கடேஸ்வரா பள்ளி வரை வாகனங்கள் நின்றன.

  அப்போது மின்சாரமும் தடைபட்டதால் பாதசாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இந்த போக்குவரத்து சீர்குலைவு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

  மீன் மார்க்கெட் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது.

  வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளிவரும் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai