சுடச்சுட

  

  வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமை ஆட்சியர் பொ.சங்கர் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

  முகாமில் பங்கேற்ற ஆசிரியர்களிடையே ஆட்சியர் பேசியது:

  தமிழக முதல்வர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாண்டில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

  வேலூர் கல்வி மாவட்டத்தில் 124 பள்ளிகளிலும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 110 பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

  இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு அடிப்படை கல்வி அறிவு இருந்தால்தான் மொழியை சிறப்பாக கற்பிக்க முடியும். ஆசிரியர்கள் மொழிப் பாடங்களை நடத்தும்போது மொழியை கற்றுக் கொடுப்பது ஜனநாயகக் கடமை. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

  இப்பயிற்சி முகாம் 2 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை வேலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 124 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

  முதன்மைக் கல்வி அலுவலர் செங்குட்டுவன், கூடுதல் அலுவலர் மாணிக்கம், மாவட்டக் கல்வி அலுவலர் அருண்மொழி, மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் ஷேக்பஷீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai