சுடச்சுட

  

  முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

  ஸ்ரீபுரம் நாராயணி வித்யாலயாவில்..: வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி வித்யாலயா பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

  விழாவில் புலவர் இரா.ஞானசேகரன் சிறப்பரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

  விழாவுக்கு பள்ளித் தாளாளர் மீ.சுரேஷ்பாபு, முதல்வர் ச.ரமேஷ், பொற்கோயில் பொறியாளர் ம.ஜெயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  ஊசூர் மேல்நிலைப் பள்ளியில்..: ஊசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமை ஆசிரியர் வி.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.

  பள்ளி தலைமை ஆசிரியர் இ.கேசவன் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவியரிடையே போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி உதவி தலைமை ஆசிரியைகள் ஜி.செல்வராணி, ஆர்.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆர்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  வள்ளலார் பள்ளியில்..: வேலப்பாடி வள்ளலார் ராமலிங்கம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் க.சரவணன் பரிசுகளை வழங்கினார்.

  ஆக்க தொண்டர் எம்.ஜி.பாண்டியன், செயலர் வி.டி.தீனதயாளன், உறுப்பினர் வி.ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை கே.செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  ஆலங்காயம்

  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்..: ஆலங்காயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் சிவா தலைமை வகித்தார். இதில், பொதுத்தேர்வுகள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா கந்தன், துணைத் தலைவர் பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.கணேசன், உதவித் தலைமையாசிரியை புஷ்பலீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  ஆம்பூர்

  500 பேருக்கு அன்னதானம்: காமராஜ் பவன் ஸ்தாபன அறக்கட்டளை சார்பில் ஆம்பூரில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.

  விழாவுக்கு அறக்கட்டளையின் பொருளாளர் டி.எம். தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.  அறக்கட்டளை தலைவர் கே. குப்புசாமி, நிர்வாகிகள் சி.குப்புசாமி ரெட்டியார், ஜி. விஜயன், எம். முரளிதரன், அறக்கட்டளை உறுப்பினர்கள் கே.எம்.எஸ். ராஜகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  பாங்கி ஹயாத் பாஷா பள்ளியில்..: ஆம்பூர் பாங்கி ஹயாத் பாஷா சாஹெப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், காமராஜர் பற்றி தலைமை ஆசிரியர் எஸ்.பசுலுல்லா பேசினார்.

  மாதனூர்

  அரசு மேல்நிலைப் பள்ளியில்..: மாதனூர் அரசு மேல்லைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

  பள்ளித் தலைமை ஆசிரியர் வில்வநாதன் தலைமை வகித்தார். 

  பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி நாராயணன், சமூக அறிவியல் ஆசிரியர் ஏ. அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

  குடியாத்தம்

  காமராஜர் கல்வி பண்பாட்டு மன்றம் சார்பில்..: குடியாத்தம் காமராஜர் கல்வி பண்பாட்டு மன்றம் சார்பில், ராஜகோபால் நாயுடு ஆஸ்திக சமாஜத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் 700 மாணவர்களுக்கு இலவச குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.

  விழாவுக்கு மன்ற கௌரவத் தலைவர் கே.எம். பூபதி தலைமை வகித்தார். மன்றத் தலைவர் கோ. மணி வரவேற்றார்.

  எம்எல்ஏ கு. லிங்கமுத்து, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் ஆகியோர் மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கினர்.

  மன்ற நிறுவனர் தீபம் எஸ். பெரியசாமி, மன்றக் காப்பாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், மன்ற பொதுச்செயலர் எஸ். நாகராஜன், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, மன்றத் தணிக்கையாளர் எம். கிருபானந்தம், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், நகர்மன்ற உறுப்பினர் பூங்கோதை முனியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

  இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் காமராஜர் குறித்து பர்வீன் சுல்தானா சிறப்புரையாற்றினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai