Enable Javscript for better performance
சித்த மருத்துவத்தில் நோய் வரும்முன்பே காக்கும் வழி உண்டு விஐடியில் விஞ்ஞானி சிவா அய்யாதுரை பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    சித்த மருத்துவத்தில் நோய் வரும்முன்பே காக்கும் வழி உண்டு விஐடியில் விஞ்ஞானி சிவா அய்யாதுரை பேச்சு

    By வேலூர்  |   Published on : 17th July 2013 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களை முழுமையாக குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதுடன், நோய் வருவதற்கு முன்பே உடல்நலம் பேணுவதற்கான வழிமுறைகளும் உள்ளன என்று அமெரிக்க நாட்டின் இந்திய விஞ்ஞானி சிவா அய்யாதுரை கூறினார்.

    விஐடியில் உயிர் அறிவியல் தொழில்நுட்ப பள்ளி சார்பில் உயிரியலின் முதல் சிகிச்சை முறை சித்தா என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் விஞ்ஞானி வி.ஏ.சிவா அய்யாதுரை பேசியது:

    நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகள் உள்ளன. இதற்கும் மேற்கத்திய மருத்துவ முறைக்கும் வித்தியாசம் உண்டு. இந்திய மருத்துவ முறைகள் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை. மேற்கத்திய சிகிச்சை அக்காலத்தில் நடந்த சண்டை, விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை முறை.

    இன்றைக்கும் பல்வேறு நோய்களுக்கு மனிதனால் மருந்து கண்டறியமுடியவில்லை. தற்போது பயன்படுத்தும் மருந்துகளில் இருந்தே புதிய மருந்துகள், மாத்திரைகளை உருவாக்கி வருகின்றனர்.

    சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய் சிகிச்சை முறை உண்டு. அதே நேரத்தில் நோய் வரும் முன் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

    ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்கினங்கள் பயன்படுத்தப்பட்டு கொல்லப்படுகின்றன. சித்த மருத்துவ முறையில் இத்தகைய நிலை இல்லை. சித்த மருத்துவத்தில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட நிலைகளைக் கொண்டு புதிய மருந்துகளை நாம் கண்டறிய முடியும் என்றார் சிவா அய்யாதுரை.

    விஐடி துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai