சுடச்சுட

  

  குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் கால்வாய் தூரெடுக்கும் பணி நடைபெறுகிறது.

  இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூலி குறைவாக கொடுத்ததாகக் கூறி செவ்வாய்க்கிழமை குடியாத்தம்- மேல்ஆலத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலின்பேரில் வட்டாட்சியர் எம். கஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் மற்றும் போலீஸார் அங்கு சென்றனர்.

  செய்த வேலைக்குத் தகுந்தவாறு தான் கூலி கொடுக்கப்படும் என அவர்கள் விளக்கம் அளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai