Enable Javscript for better performance
பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    :ஆம்பூர் பாங்கி ஹயாத் பாஷா சாஹெப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

    பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.பசுலுல்லா தலைமை தாங்கினார். காமராஜர் பிறந்த நாளை ஏன் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம் என்பதை அவர் மாணவர்களுக்கு விளக்கினார்.

    வள்ளலார் பள்ளியில்

    வேலப்பாடி வள்ளலார் இராமலிங்கம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் க.சரவமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.

    ஆக்க தொண்டர்கள் எம்.ஜி.பாண்டியன், செயலர் வி.டி.தீனதயாளன், உறுப்பினர் வி.ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை கே.செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai