Enable Javscript for better performance
பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூரை அடுத்த சிவநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊசூரை அடுத்த சிவநாதபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. 175 மாணவ, மாணவியர் பயிலும் இப்பள்ளியில் 12 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

    இரு ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளனவாம்.

    இந்நிலையில், தலைமை ஆசிரியையாக அண்மையில் பிரேமலதா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் ஆசிரியர் இல்லாத வகுப்புகளுக்கு சென்று பாடம் எடுத்து வந்தாராம். இந்நிலையில் திடீரென அவரை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர் பள்ளி முன்பு செவ்வாய்க்கிழமை திரண்டனர்.

    பள்ளியின் பிரதான நுழைவாயில் கேட்டிற்கு பூட்டு போட்டனர். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவர்கள் சாலையோரத்தில் காத்திருக்கத் தொடங்கினர்.

    உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருபாகரன் மற்றுமந் அரியூர் காவல் நிலையப் போலீஸார் சம்பவ இடத்தில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.

    காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நல்ல முறையில் பணிபுரிந்த வந்த ஆசிரியை பிரேமலதாவை மீண்டும் இப்பள்ளிக்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.

    கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பெற்றோர் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai