சுடச்சுட

  

  வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் அணைக்கட்டு எம்எல்ஏ ம.கலையரசு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

  கல்லூரியில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் பணிகளை பார்வையிட்ட அவர், அப்பணியை விரைந்து முடித்து கல்லூரியின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க ஒப்பந்ததாரர்களை கேட்டுக் கொண்டார்.

  கல்லூரியில் நிலுவையில் உள்ள கட்டுமான பராமரிப்புப் பணிகள் குறித்து பொதுப்பணித் துறை இணைப் பொறியாளரிடம் கேட்டறிந்தார்.

  கல்லூரிக்கு பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவுகளுக்கு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 20-ல் இருந்து 40 ஆக உயர்த்துவதற்கு அரசிடம் தனது சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதை சுட்டிக் காட்டிய எம்எல்ஏ, அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

  கல்லூரி முதல்வர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai