Enable Javscript for better performance
507 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

    :கலசபாக்கத்தை அடுத்த பழங்கோயில் கிராமத்தில் 507 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

    விழாவுக்கு வட்டாட்சியர் காமராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை வழங்கி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது:

    முதல்வராக மூன்றாவது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தேர்தல் நேரத்தில் அவர் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார். இப்பகுதி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றார் கிருஷ்ணமூர்த்தி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai