சுடச்சுட

    

    ஆதார் அட்டை: புகைப்படம் எடுக்கும் பணி நிறுத்தம்

    By ஆம்பூர்  |   Published on : 18th July 2013 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் அருகே சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.
    இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம், கைரேகை, கருவிழி ஆகியவை பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
    அப்போது "சின்னகொம்மேúஸவரம் கிராமம், கங்காபுரம் அஞ்சல்' என்றிருக்க வேண்டிய முகவரி "சோமலாபுரம் அஞ்சல்' என்று கணினியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, புகைப்படம் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    அப்போது முகவரியை சரிசெய்ய வேண்டுமானால் சுமார் 3 மாதத்துக்கு மேலாகும்.
    அதன் பிறகு தான் மீண்டும் புகைப்படம் எடுக்கப்படுமென அப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், முகவரி மாற்றம் செய்த பிறகு தான் புகைப்படம், கருவிழி, கைரேகை பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்தனர். இதன்பேரில் அப்பணி நிறுத்தப்பட்டது.


     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai