சுடச்சுட

    

    "இலங்கைத் தமிழர்களுக்கும் அரசு நலத் திட்ட உதவிகள்'

    By  ஆம்பூர்,  |   Published on : 18th July 2013 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசு வழங்கும் திட்டங்களுக்கு இலங்கைத் தமிழர்கள் என்ற பாகுபாடு கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் கூறினார்.
     ஆம்பூர் அருகேயுள்ள சின்னபள்ளிக்குப்பம் இலங்கை அகதிகள் முகாமில் நடைபெற்ற விழாவில், தையல் பயிற்சி முடித்த 56 பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கி ஆட்சியர் பேசியது:
     தமிழர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கி வருகிறார். தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து நலத் திட்ட உதவிகளும் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார் ஆட்சியர்.
     எம்எல்ஏ அ. அஸ்லம்பாஷா, சார்-ஆட்சியர் ஷில்பா பிரபாகர், பேர்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவர் டி. பிரபாகரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஜெயக்குமார், தனி வருவாய் ஆய்வாளர் சாந்தி, மண்டலத் துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், ரமேஷ், பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai