சுடச்சுட

  

  வேலூர் மாவட்டத்தில் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் கேட்பாரற்றுக் கிடந்த 10 இருசக்கர வாகனங்களை போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
   திருட்டு, கொலை சம்பவங்களில் ஈடுபடுவோர் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை அருகில் உள்ள பஸ் நிலையங்கள் அல்லது ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டுச் செல்வதுண்டு. இதை கருத்தில்கொண்டு கேட்பாரற்ற வாகனங்களை மாவட்டத்தில் பறிமுதல் செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் உத்தரவிட்டார்.
   இதையடுத்து மாவட்டத்தில் போலீஸôர் நடத்திய சோதனையில் 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai