சுடச்சுட

    

    சாக்கு மூட்டையில்  இளம்பெண் சடலம் கண்டெடுப்பு

    By  வாலாஜாபேட்டை  |   Published on : 18th July 2013 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவேரிப்பாக்கம் அருகேயுள்ள மேலபுலம்புதூர் ஊராட்சிக்குள்பட்ட நங்கமங்கலம் கிராம ஏரியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த சாக்கு மூட்டையிலிருந்து இளம்பெண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
     இதுகுறித்து கிராம அலுவலர் வடமலை அளித்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இறந்த பெண்ணுக்கு 25 முதல் 30 வயது இருக்கலாம். முகம் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இச்சடலம் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
     இவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai