சுடச்சுட

    

    தியாகிகள் தினத்தையொட்டி, குடியாத்தம் நகரைச் சேர்ந்த மறைந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் மனைவிகள் புதன்கிழமை கௌரவிக்கப்பட்டனர்.
     வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மறைந்த தியாகிகளான புவனேஸ்வரிபேட்டையைச் சேர்ந்த டி.ஜி. ஜெயராமனின் மனைவி ராஜேஸ்வரியம்மாள் (83), நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த அண்ணாமலையின் மனைவி தனலட்சுமியம்மாள் (90), முனியப்பனின் மனைவி கனகவல்லியம்மாள் (93) ஆகிய 3 பேருக்கும் வட்டாட்சியர் எம். கஜேந்திரன் சால்வை அணிவித்து கௌரவித்தார் (படம்).
     துணை வட்டாட்சியர் உலகநாதன், வருவாய் ஆய்வாளர்கள் ஆர். அன்பழகன், கே. மோகன், கிராம நிர்வாக அலுவலர் ஆர். ஜீவரத்தினம், தியாகிகள் வாரிசுகள் சங்க மாவட்டச் செயலர் ஜே. ராஜேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai