சுடச்சுட

  

  மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு

  By வேலூர்  |   Published on : 18th July 2013 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் கூறியுள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
  தமிழக அரசின் உத்தரவின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், சிறப்பு பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரை பயிலும் அனைத்து மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்புக் கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.
  பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்ப படிவத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், சென்ற ஆண்டின் மதிப்பெண் பட்டியல், மாணவர் மற்றும் பாதுகாவலர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இணை கணக்கு துவங்கி, அதற்கான வங்கி கணக்கு புத்தக நகலை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  உயர்த்தி வழங்கப்பட உள்ள கல்வி உதவித் தொகை விவரம் : 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ரூபாய் ஆயிரம், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம், டிப்ளமோ மற்றும் ஐடிஐ ரூ.4 ஆயிரம், ஆசிரியர் பட்டய பயிற்சி ரூ.6 ஆயிரம், ஆசிரியர் பட்ட பயிற்சி ரூ.7 ஆயிரம், பட்டப்படிப்பு ரூ.6 ஆயிரம், முதுகலை படிப்பு, ஆராய்ச்சி படிப்பு ரூ.7 ஆயிரம் என்றார் ஆட்சியர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai