சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளிகளுக்கான  இலவச தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

  By  வேலூர்  |   Published on : 18th July 2013 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இலவச தொழிற்பயிற்சி பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் கூறியுள்ளார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பூவிருந்தவல்லியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டுபவர் தொழிற்பயிற்சி பிரிவில் இலவச விடுதி வசதியுடன் ஓராண்டு கால தொழிற்பயிற்சி பெற்றிட 14 வயது முதல் 40 வயது முடிய உள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் 31.07.2013ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
   விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அண்ணா சாலை வேலூர் - 1 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai