Enable Javscript for better performance
வள்ளிமலை கோயிலில் 31-ல் ஆடிக் கிருத்திகை விழா- Dinamani

சுடச்சுட

    

    வள்ளிமலை கோயிலில் 31-ல் ஆடிக் கிருத்திகை விழா

    By  ராணிப்பேட்டை  |   Published on : 18th July 2013 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டை அருகேயுள்ள வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 31 ஆம் தேதி நடைபெறும் ஆடிக் கிருத்திகை விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துத் தரப்படும் என கோட்டாட்சியர் ந.சண்முகசுந்தரம் கூறினார்.
     இக்கோயிலில் இம்மாதம் 30ஆம் தேதி பரணி காவடியும், 31ஆம் தேதி ஆடிக் கிருத்திகை விழாவும், 31, ஆகஸ்ட் 1,2 ஆம் தேதிகளில் திருக்கோயில் சரவணப் பொய்கையில் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளன.
     இவ்விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், கோட்டாட்சியர் ந. சண்முகசுந்தரம் பேசியதாவது:
     ஆடிக் கிருத்திகை விழாவுக்காக, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலிருந்து சுமார் 2 லட்சம் பக்தர்கள் வரை வருவர்.
     இவர்களுக்கு தேவையான வசதிகள் செய்துதரப்படும். விழா நாள்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, 100-க்கும் மேற்பட்ட போலீஸôர், 30 ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
     விழா நாள்களில் வேலூர், குடியாத்தம், ஆற்காடு, திருத்தணி, திருவலம் உள்ளிட்ட நகரங்களின் வழியாக 100-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
     தடையில்லா மின்சாரம், குடிநீர், சுகாதார வசதி போன்ற வசதிகளும் மேற்கொள்ளப்படும்.
     ராணிப்பேட்டை, சிப்காட் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் தீத்தடுப்பு மற்றும் உயிர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வனப் பகுதியில் அசாம்பாவிதம் நிகழாமல் இருக்க வன அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.
     வட்டாட்சியர் என்.தட்சிணாமூர்த்தி, இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் ஆர். பாரிவள்ளல், ஆய்வாளர் ஆர்.அய்யம்பிள்ளை, செயல் அலுவலர்
     பரந்தாமக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் க.சிவநேசன், ஏஎஸ்ஐ உதவி பராமரிப்பாளர் ப.சந்திரசேகரன், மேலாளர் நித்தியானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai