சுடச்சுட

    

    அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள்

    By அரக்கோணம்,  |   Published on : 19th July 2013 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கைகள், பொது கழிவறை, நடைபாதை உள்ளிட்ட கூடுதல் வசதிகள் செய்துதரப்படும் என தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் பி.கே.மிஸ்ரா கூறினார்.

    அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை அவர் சிறப்பு ரயிலில் வந்தார். பின்னர் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடையின் விரிவாக்கப் பணி, 2ஆம் நடைமேடையில் பயணிகளுக்கான இருக்கை வசதிகள், கழிவறை வசதிகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர் அவற்றில் சில மாறுதல்களை

    செய்ய அவர் உத்தரவிட்டார்.

    இதைத் தொடரந்து, ரயில் நிலைய முகப்புக் கட்டடத்துக்கு வந்த பி.கே.மிஸ்ரா அங்கும் நடைபாதை மற்றும் பயணிகளுக்கான இருக்கைகளை அமைக்க உத்தரவிட்டார்.

    அப்போது ரயில் நிலைய மேலாளர் சிவசங்கரன், போக்குவரத்து ஆய்வாளர் மனோகரன், முதன்மை எஞ்ஜின் ஆய்வாளர் தேவசகாயம், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai