சுடச்சுட

  

  ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்காகக் கட்டப்படும் புதிய கட்டடம் நகரிலேயே அமைய வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

  ஆம்பூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியது:

  பி.ஆர்.சி.சீனிவாசன்: ஆம்பூர் நகரில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பைப் லைன் அமைக்கப்பட்டதால் சாலை சேதமடைந்துள்ளது. அதனால், சாலையில் விபத்துகள் நடக்கின்றன. ஆகவே, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இ.சுரேஷ்பாபு: ஏ-கஸ்பா, பி-கஸ்பா ஆகிய பகுதிகளுக்கு பொதுவான இடத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் மக்கள் குறை கேட்க அலுவலகம் கட்டித் தர வேண்டும்.   ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் ஆகியவை நகர பகுதிக்குள் அமைய வேண்டும்.

  அறிவழகன்: சாணாங்குப்பம் வண்ணாந்துறை பகுதியில் கானாற்றின் குறுக்கே புதிய தடுப்பணையைக் கட்டி நிலத்தடி நீரை அதிகரிக்க செய்து மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

  சுதாகர்: ஆனைமடுகு தடுப்பணை அருகே நகராட்சி சார்பில் குடிநீர் கிணறு அமைக்க வேண்டும்.

  பி.கே.மாணிக்கம்:  ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

  கூட்டத்தில் ரூ.1.20 கோடியில் குடிநீர், கால்வாய், சாலை அமைத்தல் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

  நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai