Enable Javscript for better performance
இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்

    By ஆம்பூர்  |   Published on : 19th July 2013 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜெனிவா ஒப்பந்த நாளை முன்னிட்டு, இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான  போட்டிகள் ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இப்போட்டிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் டி. மனோகரன் தலைமை வகித்தார்.  இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் செ.நா. ஜனார்த்தனன், பள்ளித் தலைமை ஆசிரியர் பி. சிவாஜிராவ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி சி.குணசேகரன், இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட பொருளாளர் எஸ். நாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் பி. தண்டபாணி, சி. சுப்பிரமணி, சண்முக சீனிவாசன், ஏ. ஆனந்தன், ஏ. தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில்  காட்பாடி, குடியாத்தம், மாதனூர், பேர்ணாம்பட்டு, ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 45 மாணவர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai