சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

    சொரக்காயல்நத்தம் ஊராட்சியில் பணியாற்றிவரும் 200-க்கும் மேற்பட்ட இத்தொழிலாளர்கள் தங்களுக்கு 5 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

    ஒன்றியக் குழுத் தலைவர் பாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கணபதி, காவல் ஆய்வாளர் பழனி உள்ளிட்டோர் சமரசம் பேசினர்.

    2 வார ஊதியத்தை உடனடியாகவும், 3 வார ஊதியத்தை ஓரிரு நாள்களிலும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    ஆற்காட்டில் மறியல்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ஆற்காடு ஒன்றியத்துக்குள்பட்ட சாத்தூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏரி தூர்வாரும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு தங்களுக்கு ஒரு மாதமாக உரிய ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, ஆற்காடு- ஆரணி சாலையில் வியாழக்கிழமை திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் லியோபால் நிர்மல்குமார் அங்கு சென்று, சமரசம் செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai