Enable Javscript for better performance
கூடுதல் விலைக்கு தேங்காய்கள் கொள்முதல்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் 1000 தேங்காய்களுக்கு மார்க்கெட் விலையைவிட ரூ.100 வரை அதிகம் கொடுப்பது என  குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கம் முடிவு செய்துள்ளது.

    இச்சங்கத்தின் தலைவர் ஜே.கே.என். பழனி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பது, சங்கம் சார்பில் நடத்தப்படும் நகர்ப்புற ரேஷன் கடைகளில் தரமான தேங்காய்களை ரூ.6 முதல் விற்பனை செய்வது, சங்கம் சார்பில் நடத்தப்படும் மருந்துக் கடையை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்துவைத்து 12 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.துணைத் தலைவர் எஸ். கோதண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai