சுடச்சுட

    

    கொத்தடிமை முறையை ஒழிக்க தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்

    By வேலூர்,  |   Published on : 19th July 2013 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொத்தடிமை முறையை ஒழிக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை மற்றும் சென்னையை சேர்ந்த இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் ஆகியவை சார்பில் கொத்தடிமை முறை ஒழிப்பு குறித்த ஒருநாள் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதைத் தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது:

    வேலூர் மாவட்டத்தில் கொத்தடிமைகள் எங்கெல்லாம் உள்ளனர் என்பதை கண்டறிந்து அவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  கொத்தடிமைகளாக உள்ளவர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். தவறு செய்பவர்களை கண்டறிந்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.  தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் இதுபோன்ற கொடுமைகளை களைய முன்வர வேண்டும். பொதுமக்கள் கொத்தடிமை குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

    வருவாய் கோட்டாட்சியர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), பிரியதர்ஷினி (ராணிப்பேட்டை), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜி. சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. பாரதிதாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வை. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai