சுடச்சுட

  

  கொல்லப்பட்ட பெண் எஸ்.ஐ.யின் எலும்புக் கூடு பரிசோதனை

  By வாலாஜாபேட்டை  |   Published on : 19th July 2013 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மூன்றாண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரின் (எஸ்.ஐ.) எலும்புக் கூடு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

  காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கலைவாணியை (25), 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் காணவில்லை. அவரது கணவர் சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், மேல்மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

  இந்நிலையில், கலைவாணியை திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞரின் உதவியாளர் வெங்கடேசன் கொலை செய்து, காவேரிப்பாக்கத்தை அடுத்த சங்கரம்பாடி பாலாற்றில் புதைத்தது அண்மையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.

  இந்நிலையில், பாலாற்றில் சடலம் தேடும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  புதன்கிழமை மாலை 6 மணியளவில் கலைவாணியின் எலும்புக் கூடு கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காலை இந்த எலும்புக் கூட்டுக்கு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

  அரக்கோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன், காஞ்சிபுரம் தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில், வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரியாமாலினி, சதீஷ்குமார் உள்ளிட்டோர் இச்சோதனையை  மேற்கொண்டனர்.

  இதைத் தொடர்ந்து, எலும்புக் கூடு கலைவாணியுடையதா என்பது உறுதி செய்யப்பட்டவுடன் மீண்டும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai