சுடச்சுட

    

    கோ-ஆப்டெக்ஸ் தங்க மழைத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

    கோ-ஆப்டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1935ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து 2012-13ஆம் ஆண்டில் ரூ.244.61 கோடி சில்லரை விற்பனை புரிந்துள்ளது. 

    நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் ரூ.30.32 கோடி விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு நடைபெற்ற விற்பனையான ரூ.22.47 கோடியைவிட ரூ.7.85 கோடி அதிகரித்துள்ளது.  

    ரொக்க விற்பனையை அதிகரிக்கும் வகையில் 1.10.2012 முதல் 31.1.2013 வரையில் தங்க மழைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள துணை ரகங்களுக்கும் ஒரு பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.  11 மண்டலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த விடையளித்த வாடிக்கையாளர்கள் 11 நபர்களுக்கு முதல் பரிசாக தலா 50 கிராம் தங்கக் காசு, 11 நபர்களுக்கு 2ஆம் பரிசாக தலா 25 கிராம் தங்கக் காசு, 11 பேருக்கு 3ஆம் பரிசாக தலா 16 கிராம் தங்கக் காசு வழங்கத் தேர்வு செய்யப்பட்டனர்.

    11 மண்டலத்துக்கும் சேர்த்து மொத்தம் ஒரு கிலோ தங்கக் காசு பரிசாக வழங்கப்பட உள்ளது. இது தவிர ஆறுதல் பரிசாக 220 நபர்களுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பட்டுச் சேலைகள் வழங்கப்பட உள்ளது.  இத்திட்டத்தின் வாயிலாக கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி மற்றும் பொங்கல் காலங்களில் மொத்தம் ரூ.154 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.  இது கடந்த பண்டிகைக் கால மொத்த விற்பனையை விட ரூ.42 கோடி அதிகம்.

    வேலூர் மண்டல வாடிக்கையாளர்களுக்கு பரிசளிப்பு:

    வேலூர் மண்டலத்தில் உள்ள 18 விற்பனை நிலையங்களில் இத்திட்டக் காலத்தில் ரூ.19.12 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது. இத்திட்டத்தில் பரிசு வழங்கும் விழா வேலூர் அண்ணா சாலையில் உள்ள தீபம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

    வேலூர் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் கே. சுஜாதா, என். சங்கர், எம். சுப்பிரமணியன் ஆகியோருக்கு முறையே 50 கிராம், 25 கிராம் மற்றும் 16 கிராம் தங்கக் காசுகளையும், 20 வாடிக்கையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பட்டுச் சேலைகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் கை. பலராமன் வழங்கினார்.

    விழாவுக்கு கோ-ஆப்டெக்ஸ் சென்னை தலைமை அலுவலக உதவி பொது மேலாளர் (தணிக்கை) பா. திருமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார மேலாளர் சி. சண்முகம், காஞ்சிபுரம் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) ஜி. ஜகந்நாதன், இரக மேலாளர் பெ. மாணிக்கம், தீபம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் பி.ஏ. சங்கரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. பாரதிதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai