சுடச்சுட

  

  : வேலூர் சங்கரன்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

  வேலூர் சங்கரன்பாளையம், வடிவேல் நகர், வீராசாமி நகர், டோல்கேட், அண்ணா நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், சங்கரன்பாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் பார் இல்லாமல் டாஸ்மாக் மதுக்கடை சில ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிறகு அக்கடை அங்கிருந்து அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

  இதனால் பெண்களும், மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுவர். எனவே அங்கு மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் எனஅவர்கள் கோரியிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai