தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தேமுதிகவினர் கைது
By வேலூர், | Published on : 19th July 2013 03:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பொய் வழக்கு போடப்படுவதாகக் கூறி, வேலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தடையை மீறி பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் ஜெ. விஸ்வநாதன் தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, அணைகட்டு ஒன்றியச் செயலர் கலைஞர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து, 20 பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்
பட்டனர்.
ஆம்பூர்
ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலர் எம்.கே. ஹரிகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக, 8 பெண்கள் உள்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் பூட்டுத்தாக்கு நித்யா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக, எம்எல்ஏ பி.ஆர்.மனோகர், நகரச் செயலாளர் ஜெஸ்டின் பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் சி.டி.பிரபாகரன், மாவட்டப் பொருளாளர் கே.வி.பாலாஜி, மாவட்ட மகளிர் அணி செயலர் ஆர்.வசந்தி உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்
பட்டனர்.