சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக முதியவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    திருப்பத்தூர் அருகே சு.பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 21 வயது மாற்றுத் திறனாளி பெண் வீட்டில் ஒரு அறையில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேறு அறையில் இருந்துள்ளனர். அப்போது அவரது பெற்றோருக்கு தெரிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பழனி (65) என்பவர் மாற்றுத் திறனாளி பெண்ணிடம் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்பெண் கூச்சல் போடவே அவரது பெற்றோர் அந்த அறைக்கு சென்று பழனியை தாக்கினராம். அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் கந்திலி போலீஸில் புகார் செய்தனர். கந்திலி போலீஸார் வழக்கை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி அனுப்பி வைத்தனர். மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி பழனியை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai