சுடச்சுட

    

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By வேலூர்  |   Published on : 19th July 2013 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை கார்பரேட் நிறுவனங்களுக்கு கொடுப்பதைக் கண்டிப்பது, அவற்றின் மீதான விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறக்கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    வேலூர்

    வேலூர் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகரத் துணைச் செயலர் எம். ஜீவா தலைமை வகித்தார். நிர்வாகிகள் கு.மு.கோவிந்தராஜ், நஸிர் அகமது, கருணாகரன், குப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    குடியாத்தம்

    குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலர் முல்லை சுந்தரேசன் தலைமை வகித்தார். எம்எல்ஏ கு. லிங்கமுத்து, மாவட்ட துணைச் செயலர் ஏ.டி. சுந்தரேசன் ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். நிர்வாகிகள் சி. சுப்பிரமணி, எஸ். பன்னீர்செல்வம், எஸ்.பி. சக்கரவர்த்தி, எம்.பி. சங்கர், துரைசெல்வம், என்.ஆர். ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    வாணியம்பாடி

    வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலர் எஸ்.அன்வர் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முல்லை, நகரத் துணைச் செயலர் கே.எம்.முனீர், கிளையின் செயலர்கள் ஜாகீர்உசேன், மணிவண்ணன், வரதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai