சுடச்சுட

    

    ராணிப்பேட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

    By ராணிப்பேட்டை  |   Published on : 19th July 2013 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 2013-14ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் புதன்கிழமை பதவியேற்றனர்.

    விழாவுக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.அஸ்பாக் உசேன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கப் பயிற்றுனர் சி.ஆர்.சந்திரபாப், சமுதாயப் பணி இயக்குநர் கே. ஜெயகீர்த்தி, முன்னாள் செயலர் என்.பி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் எஸ்.முருகன் வரவேற்றார்.

    சங்கத் தலைவர் ஆர்.இ. எழில்வாணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஏ.பி.கண்ணா, திமுக மாவட்டச் செயலர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தனர் .

    இதையடுத்து, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய குடிநீர் கேன்களும், பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    அப்போது சங்கத் தலைவர் ஆர்.இ.எழில்வாணன் ரோட்டரி சங்கத்தின் சமூகச் செயல்பாடுகளுக்காக ரூ.6 லட்சம் வழங்கியதற்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

    ரோட்டரி சங்கத் துணைச் செயலர் வி.வி.மணிகண்டன், லீராணி மாத இதழ் ஆசிரியர் எம்.சாந்தி மணிகண்டன், நிர்வாகிகள் வி.எம்.நிர்மல் ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai