சுடச்சுட

    

    சுற்றுப்புற சுகாதாரத்தை சிறப்பாக பேணிக்காத்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சிகளுக்கு நிர்மல் புரஸ்கார் விருதை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் வியாழக்கிழமை வழங்கினார்.

    நிர்மல் பாரத் அபியான் (முழு சுகாதார இயக்கம்) சார்பில் கிராம ஊராட்சியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பது, பள்ளி, அங்கன்வாடி மற்றும் மகளிர் சுகாதார வளாகம் மூலமாக சுற்றுப்புற சுகாதாரத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து அதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி தலைவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக குடியரசு தலைவரால் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது 2011ஆம் நிதியாண்டில் வேலூர் மாவட்டத்தில் 94 ஊராட்சிகள் பரிந்துரை செய்யப்பட்டதில் 13 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு நிர்மல் கிராம் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் 13 ஊராட்சி தலைவர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந. சீனிவாசன், மகளிர் திட்ட அலுவலர் லோகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் லீலா சுப்பிரமணியன், அணைக்கட்டு ஒன்றியக்குழுத் தலைவர் சூரியகலா ஆகியோர் உடனிருந்தனர்.

    விருது பெற்ற ஊராட்சிகள்: ஆலங்காயம் ஒன்றியத்தை சேர்ந்த சம்மந்திகுப்பம், அணைக்கட்டு ஒன்றியம் கருங்காலி, கரடிகுடி, குடியாத்தம் ஒன்றியம் ஒலக்காசி, கந்திலி ஒன்றியம் லக்கிநாயக்கன்பட்டி, நார்சாம்பட்டி, காவேரிபாக்கம் ஒன்றியம் மாகானிப்பட்டு, நந்திமங்கலம், நாட்டறம்பள்ளி ஒன்றியம் சங்கராபுரம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் சொக்கரிஷிகுப்பம், சோளிங்கர் ஒன்றியம் ஜம்புகுளம், பரமசாத்து, புலிவலம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai