சுடச்சுட

  

  அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்

  By அரக்கோணம்  |   Published on : 20th July 2013 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு அரக்கோணம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மு.ரத்தினம் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் து.முனுசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் டி.பியூலா கிறிஸ்டி சாந்தமணி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.தேவராஜன், தணிகைபோளூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரளா பிரவீன்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ரமணி குட்டிபாபு, உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.ஜி.மோகன்காந்தி, கிராம கல்விக்குழு தலைவர் ரகு, கிராமப் பிரமுகர்கள் ஆனந்தன், பிரகாஷ், சிவகுமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai