சுடச்சுட

    

    உழவர் குழுவுக்கு ரூ.15 லட்சம் வேளாண் இயந்திரங்கள்

    By வேலூர்,  |   Published on : 20th July 2013 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டத்தில் 16 இளம் விவசாயிகளைக் கொண்ட உழவர் குழு பதிவு செய்யப்பட்டு, அக்குழுவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் 12 வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் பொ.சங்கர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

    நவீன வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், ஒப்பந்த அடிப்படையில் விவசாயப் பணிகளுக்கு இவற்றை குறைந்த வாடகையில் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கும் வகையில் உழவர் குழுக்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்டத்தில் 16 இளம் விவசாயிகளைக் கொண்ட ஒரு உழவர் குழு உருவாக்கப்பட்டு, "பசுமை வேளாண் இயந்திரமயமாக்கல் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குழுவில் இடம்பெற்றுள்ள 16 உறுப்பினர்களுக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் நவீன வேளாண் இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பயிற்சி 6 மாதம் நடத்தப்பட்டது. இதில் சிறந்த முறையில் பயிற்சி பெற்ற இவர்களை 4 உபகுழுக்களாக பிரித்து 100 சதவீத மானியத்தில் 4 பவர் டில்லர்கள், 4 களையெடுக்கும் கருவிகள், 4 நெல் நாற்று நடும் இயந்திரங்கள் ஆகியன ரூ.15 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன.

    இதில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எம்.எஸ்.இன்பநாதன், வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai