சுடச்சுட

    

    குடியாத்தத்தை அடுத்த பெரும்பாடி ஊராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இந்த ஊராட்சிக்குள்பட்ட சில கிராமங்களில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லையாம்.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.

    இந்நிலையில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் குடியாத்தம்-சேம்பள்ளி சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி சுகுமாரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.டிக்காராம் உள்ளிட்டோர் அங்கு சென்று அவர்களை சமரசம் செய்தனர்.

    குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai