சுடச்சுட

    

    சாக்குமூட்டையில் இளம் பெண் சடலம்: வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    By வாலாஜாபேட்டை  |   Published on : 20th July 2013 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. காவேரிப்பாக்கம் அருகேயுள்ள மேலபுலம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட நங்கமங்கலம் ஏரியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த சாக்கு மூட்டையிலிருந்து இளம் பெண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி வடமலை அளித்த தகவலின் பேரில் காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

     இறந்த பெண்ணுக்கு 25 முதல் 30 வயது வரை இருக்கலாம். முகம் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இச்சடலம் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     அரக்கோணம் டி.எஸ்.பி. சீதாராமன், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் காவேரிப்பாக்கம் காவல்நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து தனது மனைவி கங்காதேவி (28) என்பவர் கடந்த 13ம் தேதி மாலை தனது தாய் வீடான திருநின்றவூர் சென்றவர் வீடு திரும்பவில்லை எனக் கூறி இறந்த இளம் பெண்ணின் அடையாளங்களைத் தெரிவித்தார்.

    மேலும் இச்சம்பவம் குறித்து சரவணன் திருவான்மியூர் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.

    சரவணன், அவரது உறவினர்கள் கூறிய அடையாளங்கள் ஏறக்குறைய பொருந்தி இருந்தாலும் முகம் அடையாளம் காணப்படும் நிலையில் இல்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் இறந்த பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் பெண்ணின் சடலம் சரவணனிடம் ஒப்படைக்கப்படவில்லை. மேலும் தடயவியல் மருத்துவ ஆய்வுக்குப் பின் உரியவர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai