Enable Javscript for better performance
புற்றுமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா - Dinamani

சுடச்சுட

    

    புற்றுமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா

    By வேலூர்  |   Published on : 20th July 2013 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர், கமலாட்சிபுரத்தில் ஸ்ரீபுற்றுமாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இவ்விழாவை முன்னிட்டு அதிகாலையில் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. காலை 9 மணியளவில் கரக ஊர்வலம் புறப்பட்டது.

    நண்பகலில் கூழ்வார்த்தல் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு பொங்கலிடுதல், இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

    சோலாபுரி அம்மன் கோயிலில்

    வேலூர், கொசப்பேட்டை, அவல்காரத் தெருவில் உள்ள அருள்மிகு சோலாபுரி அம்மன் திருக்கோயிலில் காலையில் மஹா அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மன் திருஊஞ்சல் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai