சுடச்சுட

  

  மண்டபத்தின் 3-வது மாடியிலிருந்து விழுந்த பெண் சாவு

  By வாணியம்பாடி  |   Published on : 20th July 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருமண மண்டபத்தின் 3-வது மாடியிலிருந்து விழுந்த பெண் உயிரிழந்தார்.

  திருப்பத்தூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சாலா (40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சாலா நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரபள்ளியில் உள்ள தனியாருக்கு சொந்தமான புதிய திருமண மண்டபத்தில் கட்டட வேலைக்கு வெள்ளிக்கிழமை சென்றார்.

  அங்கு மதிய வேளையில் மண்டபத்தை ஒட்டியிருந்த முருங்கை மரத்திலிருந்து கீரை பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 3-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai