சுடச்சுட

    

    ராபின்சன் குளம் பகுதியில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற முடிவு

    By குடியாத்தம்  |   Published on : 20th July 2013 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் ராபின்சன் குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி, அவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கித் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    50 ஆண்டுகளாக குப்பை மேடாக காட்சியளித்த குடியாத்தம் ராபின்சன் குளத்தில் தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் தூரெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    குளத்தின் மேற்குக் கரையில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நிரந்தர, தாற்காலிக, நடைபாதைக் கடைகள் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    குளம் தூரெடுக்கும் பணிக்காக அந்தக் கடைகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அங்கு கடை வைத்துள்ளவர்கள், கடைகளை அகற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர்.இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலூர் கோட்டாட்சியர் ந. சண்முகசுந்தரம் தலைமையில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் வட்டாட்சியர் எம்.கஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், துணைத் தலைவர் எஸ்.டி.மோகன்ராஜ், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி, வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.யுவராஜ், நகர்மன்ற உறுப்பினர் கே.கேசவன், ஆர்.கே.அன்பு, என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai