சுடச்சுட

    

    வாலாஜாபேட்டை அருகே லாரியை வழிமறித்து நிறுத்தி பணம் பறிக்க முயன்ற 4 பேர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

    பெங்களூரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜனார்த்தனன் (48). இவர் லாரியில் கோடிக்கல் ஏற்றிக் கொண்டு சென்னையை நோக்கிச் சென்றுள்ளார்.

    வன்னிவேடு அருகே காரில் வந்த 4 பேர், லாரியை மடக்கி டிரைவரிடம் ரூ.1000 பணம் கேட்டுள்ளனர். இதற்கு டிரைவர் மறுப்பு தெரிவிக்கவே, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸார் லாரி டிரைவர் மற்றும் காரில் வந்த 4 பேரையும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் 4 பேரும் லாரி டிரைவரை மிரட்டி பணம் கேட்டது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து வாலாஜாபேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (23), கிருஷ்ணமூர்த்தி (24), மோகன்ராஜ் (23), தினேஷ் (23) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai