சுடச்சுட

    

    வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: நீதிமன்ற ஆணையால் நிறுத்தம்

    By வாணியம்பாடி,  |   Published on : 20th July 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீதிமன்றத் தடை ஆணை காரணமாக, வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

    வாணியம்பாடி சி.எல்.சாலையில் பிரபல ஜவுளிக் கடைக்குச் சொந்தமான கட்டடத்தின் பின்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டுவதாகக் கூறி, பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென நகராட்சி அதிகாரிகள் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்குத் தெரிவித்தனர்.

    ஆனாலும் கட்டடப் பணிகளை நிறுத்தாததால் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ரவி உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் காஜா மொய்தீன் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் மாணிக்கம், காவல் ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் போலீஸாருடன் வெள்ளிக்கிழமை சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர்.

    அந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இம்மாத இறுதி வரையில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி ஒரு கடிதத்தை காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் கடை உரிமையாளர் அளித்தார். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டு செய்யாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

    ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றும் பணியின்போது போலீஸார், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் நகரின் பிரதான சாலையான சி.எல்.சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai