Enable Javscript for better performance
வீட்டில் 2 சவரன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து 2 சவரன் தங்க நகை திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே உள்ள பெரிய வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (70). இவர் வீட்டை பூட்டிக்கொண்டு பெங்களூர் சென்றுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் ஊரிலிருந்து வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.  இதுகுறித்த புகாரின் பேரில் உமர்ஆபாத் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai