Enable Javscript for better performance
\\\"அனுமதி இல்லாமல்  மாம்பழம், மீன் விற்றால் கடும் நடவடிக்கை\\\'- Dinamani

சுடச்சுட

    

    "அனுமதி இல்லாமல்  மாம்பழம், மீன் விற்றால் கடும் நடவடிக்கை'

    By அரக்கோணம்  |   Published on : 21st July 2013 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "ஆரம்ப சுகாதார அலுவலர் அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே பேரூராட்சி எல்லைக்குள் மாம்பழம், மீன் விற்க அனுமதி வழங்கப்படும். அனுமதிச் சீட்டு இல்லாமல் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தக்கோலம் பேரூராட்சி மன்றத் தலைவர் சு.நாகராஜன் தெரிவித்தார்.

    மழைக் காலத்தை முன்னிட்டு நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதை சு.நாகராஜன் தொடங்கிவைத்து மேலும் பேசியதாவது:

    சுத்தமான குடிநீரை விநியோகிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வீட்டுக்கு ஒரு குழாய் இணைப்புக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதில் ஒரு குழாய் மட்டுமே பொருத்தப்பட வேண்டும்.

    இதை மீறினால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.

    துணைத் தலைவர் சீனிவாசன், பேருராட்சிகளின் செயல் அலுவலர்கள் தக்கோலம் வேணி, சோளிங்கர் தயாளன், காவேரிப்பாக்கம் மனோகரன், நெமிலி வாசுதேவன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai