சுடச்சுட

  

  குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், 175-வது இல்ல வழிபாட்டை முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  இதையொட்டி காலை 7 மணிக்கு  கருப்புலீஸ்வரர் கோயிலில் இருந்து பன்னிரு திருமுறைகளை உச்சி மீது சுமந்து திருமுறை பண்ணிசையுடனும், சிவ ஒலியுடனும் ஊர்வலம் தொடங்கி திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடையும். அங்கு காலை 8.30 மணியளவில் திருக்கழுக்குன்றம் தாமோதரன் அடிகளார் திருமுறை நூல்களை இலவசமாக வழங்கி, திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

  நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்க கௌரவத் தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு, சட்ட ஆலோசகர் கே.எம்.பூபதி, நிர்வாகிகள் எஸ்.அசோக்குமார், மு.வாசுதேவன், பி.என்.மாணிக்கம், ஓ.ஜி.வேலாண்டி, எஸ்.சௌந்தரராஜன், எம்.கிருபானந்தம், மா.து.சதானந்தம் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai