சுடச்சுட

    

    ஈராண்டில் 200 ஆண்டு கால சாதனைகளை முதல்வர் ஜெயலலிதா புரிந்துள்ளார் என அதிமுக மகளிர் அணி செயலர் எல்.சசிகலாபுஷ்பா கூறினார்.

    சத்துவாச்சாரியில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் வேலூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், அவர் பேசியது:

    திமுக ஆட்சியின் அவலங்களைக் களைந்து, இன்றைக்கு மக்களுக்கு காலத்தால் மாற்ற முடியாத பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.

    நாட்டின் பிற மாநிலங்களுக்கு அவரது திட்டங்கள் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. இதனால், அவர் பிரதமராக வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். நாட்டின் அடுத்த பிரதமராகும் தகுதி அவருக்கு மட்டுமே உண்டு.

    ஈராண்டுகளில் 200 ஆண்டுகால சாதனையை படைத்த அவரது திட்டங்கள் குறித்து மக்களிடையே வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது மகளிர் அணியின் கடமை.

    மகளிர் அணியினர் பிரசாரக் கூட்டங்களை நடத்த வேண்டும். மகளிர் அணி சந்திக்கும் பிரச்னைகள், வரும் மக்களவைத் தேர்தலில் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

    படித்த பெண்கள் பலரும் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு மகளிர் அணியினர் உதவ வேண்டும் என்றார் சசிகலா புஷ்பா.

    தீர்மானங்கள்

    முன்னதாக, ஜெயலலிதா பிரதமராக ஆவதற்கு புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றுவதற்கு தீவிரமாக தேர்தல் களத்தில் மகளிர் அணி பணியாற்றுவது, என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மாற்று யோசனை மூலம் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது, காவிரி நதிநீர் பங்கீட்டில், உச்ச நீதிமன்றத்தை நாடி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியமைக்காக நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாநில மகளிர் அணி துணைச் செயலர் கே.எம்.கலைச்செல்வி, மேயர்கள் அ.விசாலாட்சி (திருப்பூர்),பி.கார்த்தியாயினி (வேலூர்), முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் வி.எஸ்.விஜய், அ.முகமதுஜான், மாவட்டச் செயலர் சுமைதாங்கி ஏழுமலை, முன்னாள் மாவட்டச் செயலர் எம்.மூர்த்தி, மாநகர் மாவட்ட இணைச் செயலர் இரா.முனியம்மாள், சத்துவாச்சாரி நகரச் செயலர் ஏ.பி.எல்.சுந்தரம், வேலூர் தொகுதிச் செயலர் சி.கே.சிவாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai