சுடச்சுட

  

  என்.எல்.சி. விவகாரம் முதல்வருக்கு புரட்சி பாரதம் பாராட்டு

  By வேலூர்,  |   Published on : 21st July 2013 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீதப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்குவதற்கு முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றமைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புரட்சி பாரதம் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

  வேலூரில் சனிக்கிழமை அக்கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இக்கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், வரும் மக்களவைத் தேர்தலில் கட்சி எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் ஜெகன்மூர்த்தி பேசினார்.

  இதைத் தொடர்ந்து, தருமபுரி இளவரசன் சாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இளவரசன் சாவு குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டது.மக்களவைத் தேர்தலையொட்டி முதல்கட்டமாக திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் தேர்தல் பணியை மேற்கொள்வது, ஒவ்வொரு தொகுதியிலும் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பது, இலங்கையில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வருவதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  கட்சியின் மாவட்டச் செயலர் மேகநாதன், மாவட்ட அமைப்பாளர் வின்சென்ட், தலைமை நிலையச் செயலர் பூவை முகிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கோயில்களை நிர்வகிக்க சுதந்திரமான வாரியம் தேவை

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai