சுடச்சுட

  

  ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்'

  By வேலூர்,  |   Published on : 21st July 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஊதிய உயர்வு நாளுக்கு முன்பு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  வேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டப் பேரவை மற்றும் மாநாட்டில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெற்று ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.3,050 என்ற குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவச் செலவை ஈடுகட்ட ரூ.1 லட்சத்தை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். ஊதிய உயர்வு நாளுக்கு முன்பு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  மாநிலப் பொதுச்செயலர் என்.ரத்தினசுப்பிரமணியம், மாநிலப் பொருளாளர் என்.துரைக்கண்ணு, மாவட்டத் தலைவர் க.ஜனார்த்தனன், மாவட்டச் செயலர் எம்.ஜெயபால், மாவட்டப் பொருளாளர் ஆர்.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai