சுடச்சுட

    

    கோயில்களை நிர்வகிக்க சுதந்திரமான வாரியம் தேவை என்று இந்து முன்னணி நிறுவனர் அமைப்பாளர் இராம.கோபாலன் வலியுறுத்தினார்.

    வேலூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

    கோயில்களை நிர்வகிக்க சுதந்திரமான வாரியம் தேவை. ஓய்வுபெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், ஆன்மிகப் பெரியவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சுதந்திரமான வாரியமாக இது இருக்க வேண்டும். இந்த வாரியத்தின் கீழ் கோயில் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சொத்துகள் பராமரிப்பு இருக்க வேண்டும். கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்க தகுதியோ, அதிகாரமோ இல்லை. அத்துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்ற கோயில்கள் சிதிலமடைந்ததுதான் மிச்சம்.

    கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேறும் வரை இந்து இயக்கங்களும், இந்து சமுதாயமும் தொடர்ந்து போராடும்.

    மாரியம்மன் கோயில்களில் நடைபெறும் கூழ்வார்த்தலுக்கு அரசு இலவசமாக அரிசி வழங்க வேண்டும். அரசு பாரபட்சமற்ற அரசாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

    2011-ம் ஆண்டு முதல் இந்து இயக்கத் தலைவர்கள் பலர் திட்டமிட்டு தொடர்ந்து தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருகிறார்கள். இதில் வலிமையான பின்னணி கொண்ட கும்பல் உள்ளது. கொலை செய்வதன் மூலம் எந்த இயக்கத்தையும் யாராலும் அழித்துவிட முடியாது.

    தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி எனது தலைமையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார் இராம.கோபாலன்.

    இயக்கத்தின் நிர்வாகிகள் கோ.மகேஷ், ஆர்.பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai