சுடச்சுட

    

    சேலத்தில் பாஜக மாநிலப் பொதுச்செயலர் கொலை நடவடிக்கை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

    By வேலூர்  |   Published on : 21st July 2013 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் பாஜக மாநிலப் பொதுச்செயலர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் வேலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர்

    வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். பாஜக மாவட்டச் செயலர் பாபு, இந்து முன்னணி இயக்கத்தினர், ஸ்ரீராம் சேவா சங்கத்தினர், இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இந்து இயக்க மாநில நிர்வாகிகள் மீது தொடரும் தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் குரல் எழுப்பினர்.

    வாணியம்பாடி

    வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் க.சிவபிரகாசம் தலைமை வகித்தார். நகரப் பொதுச்செயலர் தெய்வமுருகன், அமைப்பு செயலர் டி.வேலு, நகரச் செயலர் உதயன், மீனவரணியின் மாவட்டத் தலைவர் டி.வி.முருகன், வணிகரணியின் மாவட்டத் தலைவர் சிவபிரகாசம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், ஆர்.டி.கிரி, எம்.ஈஸ்வரன், ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் எம்.சீனிவாசன், இந்து முன்னணியின் மாவட்டச் செயலர் டி.விட்டல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

     ஆம்பூரில் மறியல்

    ஆம்பூர் நகர பாஜக தலைவர் எம். அன்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் கொ. வெங்கடேசன், மாநில உள்ளாட்சிப் பிரிவின் தலைவர் ஜி. வெங்கடேசன், மாநில கல்வியாளர் அணியின் முன்னாள் துணைத் தலைவர் எம். தீனதயாளன், கட்சியின் நகர பொதுச்செயலர்கள் முரளி, அண்ணாதுரை, முன்னாள் நகரத் தலைவர் எம். செல்வம், நிர்வாகிகள் சண்முகம், சிவா, தியாகராஜன், ரவி, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு பாஜகவினர் நேதாஜி சாலையில் ஊர்வலமாகச் சென்று ரயில் நிலையம் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆம்பூர் டிஎஸ்பி விஜயகுமார் சமரசம் செய்ததையடுத்து, பாஜகவினர் கலைந்து சென்றனர்.

    பேர்ணாம்பட்டு

    பேர்ணாம்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவர் பி. கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கொ. வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலர் வாசுதேவன், மாவட்டச் செயலர் தண்டாயுதபாணி, நிர்வாகிகள் குப்புசாமி, ஆர்.வி. குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    வாலாஜாபேட்டை

    வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவர் எஸ். ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எஸ்.ஞானவேல், ஜி.வி.பிரகாஷ், வெங்கடராமன், தணிகாசலம், சோளிங்கர் சீனிவாசன், குப்புசாமி, ஆர்.செல்வராஜ், ஆறுமுகம், கே.பாலாஜி, உமாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அரக்கோணம்

    அரக்கோணத்தில் நகரத் தலைவர் பாபாஸ்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai