சுடச்சுட

    

    தோல் தொழிற்சாலைகளால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு

    By வேலூர்,  |   Published on : 21st July 2013 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத பயனாளிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இழப்பீட்டுத் தொகை பெறவேண்டிய, நிலுவையிலுள்ள பயனாளிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களிலும் கிராம சாவடியிலும் உள்ள அறிவிப்புப்  பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

    இழப்பீட்டுத்தொகை பெறாத பயனாளிகள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது  தாலுகா அலுவலகங்களை தொடர்புகொண்டு வரும் 26ம் தேதிக்குள் வருவாய்க் கோட்ட அலுவலர்கள் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர்  தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai