சுடச்சுட

  

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் குடியாத்தம் கிளை சார்பில் பிச்சனூர் மினர்வா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே. ரத்தினம் தன் திரையுலக அனுபவம் குறித்து எழுதிய "தாமரைக்குளம் முதல் தலைநகரம் வரை' என்ற நூல், ச. ஆறுமுகம் எழுதிய "வேட்டைக்கத்தி' என்ற சிறுகதை நூல் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.

  நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் முல்லைவாசன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ருத்ரபாரதி வரவேற்றார்.

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் ச. செந்தில்நாதன் நூல்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

  வழக்குரைஞர்கள் எஸ். சம்பத்குமார், கே.எம். பூபதி, வணிகர் சங்க நிர்வாகிகள் என்.இ. கிருஷ்ணன், டி. ராஜேந்திரன், அமைப்பின் நிர்வாகிகள் கே. ரகு, கே. முருகானந்தம், எஸ். சுகுமார், வி.டி. கலைமணி, என். ஜோதிபாசு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். வேல்முருகன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai